சிரியாவில் சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ஜோர்டான் விமானி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐ.எஸ். அமைப்பின் மீது கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான போர் தொடங்குவதாக ராயல் கோர்ட்டில் நேற்று ஜோர்டான் மன்னர் அறிக்கை வெளியிட்டார். அதில், விமானி கொலைக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
அவரது அறிக்கை வெளியான சில மணி நேரத்திற்குள் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசூல் நகரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஜோர்டான் விமானத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் நைன் வேயின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஐ.எஸ். அமைப்பின் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment