கேரளாவில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் நடிகர் மோகன்லாலின் லாலிசம் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருப்திகரமாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்காக தான் பெற்ற ரூ.1 கோடியே 63 லட்சத்தை திருப்பி அளிக்க தயார் என்று நடிகர் மோகன்லால் கேரள அரசுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். மோகன்லாலிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் திட்டம் எதுவும் கேரள அரசுக்கு கிடையாது என்று முதல்-மந்திரி உம்மன்சாண்டி நேற்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் மோகன்லால் குறித்து தேவையற்ற சர்ச்சையை கிளப்பக்கூடாது என்று சக நடிகர் மம்முட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment