ரஜினிகாந்த் பெயரிலான பட தலைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் பட தயாரிப்பாளர்.தமிழில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ஆதித்ய மேனன். இவர் நடிக்கும் இந்தி படம் ‘மைன் ஹுன் ரஜினிகாந்த்‘. பைசல் சைப் இயக்கி உள்ளார். இப்படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எனது இமேஜையும், மக்களிடம் எனக்குள்ள மரியாதையையும் கெடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளிப்பிங்க்ஸ், தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை பார்த்தபோது இந்த விவரம் தெரியவந்தது. எனவே இப்படத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்' என கேட்டிருந்தார். அதை ஏற்று படத்துக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கில் ரஜினிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி இயக்குனர் பைசல் சைப் கூறியதாவது:இப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்பவே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது. கதையும் ஹீரோவை சுற்றியே நகர்கிறது. ஒரு இயக்குனர் கதாசிரியராக ரஜினியின் மனதை மேலும் புண்படுத்த நான் நினைக்கவில்லை. படத்தின் தலைப்பை மாற்றவே நான் நினைக்கிறேன். ஆனாலும் பட தயாரிப்பாளர் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் எடுத்து செல்ல விரும்புகிறார். அதை என்னால் தடுக்க முடியாத நிலை உள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த மோதலை தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

No comments:
Post a Comment