கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் இருவர் அமைச்சர், அரசுச் செயலர் உள்ளிட்டவர்களிடம் போனில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் செல்போன்கள்:
கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன்கள் புழங்கி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு. சிறை வளாகத்தினுள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட செல்போன்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மறைத்து எடுத்து வரும் செல்போன்கள், சிம்கார்டுகளும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
அமைச்சருடன் பேச்சு:
இந்நிலையில் கைதிகளுள் இருவர் தமிழக அமைச்சர் ஒருவருடன் கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என வெளியான தகவல் உளவுப் பிரிவு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சரைத் தவிர சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து உள்ள அதிகாரிகளிடமும் ஐந்து முறை பேசியுள்ளதாக உளவுத்துறைக்கு தெரிய வந்துள்ளது.
விசாரணை:
அமைச்சரிடம் பேசிய கைதிகள் யார்? எந்த அமைச்சரிடம் பேசினார்கள்? அவர்களுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? எதற்காகப் பேசினார்கள்? என்ற கோணத்தில் உளவுப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment