மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை நாக லட்சுமி. அந்த பஸ் பாடலில் இந்த கருப்பழகி போட்ட டீசன்டான குத்தாட்டத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ரசிகர்களின் வரவேற்பு அதிகமானதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குத்தாட்ட நாயகியாகியிருக்கும் நாகலட்சுமி, மைனாவுக்கு முன்பே நாடோடிகள் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஆனால் அந்த பாடல் அந்த அளவுக்கு இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.
இப்போது 6 குத்துப்பாடல்கள் வரிசை கட்டி நிற்க, நாகலட்சுமி சேலையை வரிந்து கட்டிக் கொண்டு ஆட்டம் போட தயாராகி வருகிறார். அம்மணி தன்னைத் தேடி வரும் டைரக்டகளிடம் ஒரேயொரு கண்டிஷன் போடுகிறாராம். டைரக்டர்களும் அம்மணியின் கண்டிஷனை இன்முகத்தோடு வரவேற்று, அதற்கேற்ப பாடல் வரிகளை மாற்றவும் தயாராகி விடுகிறார்கள். அப்படியென்ன கண்டிஷன்...? சேலை கட்டித்தான் ஆட்டம் போடுவேன் என்பதுதான் அந்த கண்டிஷனாம்.
இதுபற்றி நாகலட்சுமி கூறுகையில், சேலையில இல்லாத கவர்ச்சியா, வேற டிரஸ்ஸில் இருக்கப் போவுது. சேலையில்தான் என்னோட கவர்ச்சி சிறப்பா தெரியும். அதனாலதான் சேலை கட்டி ஆடுகிறேன், என்கிறார். நல்ல கொள்கைதான்!!
No comments:
Post a Comment