அவன் இவன் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருந்ததாக முன்பு தகவல் வெளியானது. தற்போது மீண்டும் அது ஏ.ஜி.எஸ் கைக்கே வந்துவிட்டதாம். படத்தை நீங்களே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று சன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இம்மாதம் 10 ந் தேதி படம் வெளியாகும் என்று கூறிக் கொண்டிருந்தாலும், 17 ந் தேதி உறுதியாக வெளியாகிவிடும் என்று தெரிகிறது.
எல்லா படத்திற்கும் கடைசி நேரத்தில் ஏற்படுகிற குடைச்சலும் குமைச்சலும் அவன் இவன் படத்திற்கும் வந்து சேரும் என்று கணிக்கிறார்கள் இப்போதே! என்னவாம்?
விஷால் நடித்து முன்பு வெளியான சில படங்களின் பிரச்சனைகள் இன்னும் அவரை துரத்தி வருகின்றன. அவர் நடித்து எந்த படம் வெளிவந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் படத்தை விட மாட்டோம் என்று போர்க்கொடி து£க்குவதும் நடந்து வருகிறது. சுமார் மூன்றரை கோடி ரூபாய் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தர வேண்டியிருக்கிறதாம் விஷால் தரப்பு. அவர்களை சமாளித்து அவன் இவன் படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதையெல்லாம் நம்மால் சமாளிக்க முடியாது என்றுதான் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றார்களாம். ஆனால் தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டது.
இது போக இன்னொரு செய்தி. ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வேங்கை படத்தை வாங்கியிருந்த சன் பிக்சர்ஸ் இப்போது அதையும் தயாரிப்பாளரிடமே திருப்பி கொடுத்துவிட்டதாம்.
No comments:
Post a Comment