தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அமைச்சராக இருந்த மரியம்பிச்சை கடந்த 23-ந்தேதி திருச்சியில் இருந்து காரில் சென்னைக்கு வந்தபோது பாடலூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் தனிப்படை அமைத்து லாரியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிடிபட்டார். கண்டெய்னர் லாரி மேற்கு வங்காளத்தில் பிடிபட்டது. தொடந்து விசாரணை நடந்து வருகிறது
No comments:
Post a Comment