முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. வாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பின்போது கருணாநிதி தில்லி சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை வந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், திமுக பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் வந்தனர். முன்னதாக, பேரவைத் தலைவர் அறையின் வாயிலில் திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர்.
காலை 11 மணிக்கு வந்த அவர், நேராக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரின் அறைக்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு ஏற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழிப் படிவத்திலும், வருகைப் பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவியேற்றுக் கொண்ட பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பேரவைத் தலைவரான டி.ஜெயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் எழுந்து நின்று கை கொடுத்தார்.
பேரவைத் தலைவர் அறையை விட்டு வெளியே வந்த அவரிடம், பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு, "கூர்ந்து கவனியுங்கள்' என்று பதிலளித்தார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, கடலில் கோட்டை கட்டபோகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்தார் கருணாநிதி.
அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்
ReplyDeleteகல்லான் குழுத்தலைமை காண்ட தவறோன்றே
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும் வம்பினரே! வண்டமிழோர் பாடிவைத்த
வேதமொழி வேறோ விளம்பு