பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பண பதுக்கல் செய்து கைது செய்யப்பட்ட ஹஸன் அலிக்கும் அரசியல்வாதிகள் அமர்சிங், ஜெயப்பிரதா, ரேணுகா சவுத்ரி உள்ளிட்டோருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கொல்கத்தா வர்த்தகரும் ஹஸன் அலியின் கூட்டாளியுமான காஷிநாத் தபூரியா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஹஸன் அலிக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார் தபூரியா.
அவர் கூறுகையில், "ஹஸன் அலிக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. காமன்வெல்த் ஊழலில் சிறை சென்றுள்ள சுரேஷ் கல்மாடி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடி, சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்பி ஜெயப்ரதா, காங்கிரஸ் எம்பி சுப்பராமிரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார் ஹஸன் அலி," என்று கூறியுள்ளார்.
வருமான வரித் துறையின் நெருக்கடி ஆரம்பமான போது, கலவைப்பட வேண்டாம். காங்கிரஸில் எனக்கு நெருங்கிய தொடர்புள்ளது. அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம், என்று தபூரியாவிடம் சொன்னாராம் ஹஸன் அலி.
தபூரியாவின் இந்த வாக்குமூலத்தை, ஹஸன் அலிக்கு எதிரான தங்களின் 1000 பக்க குற்றப்பத்திரிகையின் ஒரு அங்கமாக இணைத்துள்ளது சிபிஐ.
No comments:
Post a Comment