ரசிகர்களை கவர எது உதவுகிறதோ இல்லையோ... ஒரு படத்தின் தலைப்பு கண்டிப்பாக உதவும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் அந்த படம், ஈஸியாக மக்களை சென்றடையும் என்பதையும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் புதிதாக உருவாகியிருக்கும் படத்திற்கு, பாக்கணும் போல இருக்கு என பெயர் சூட்டியிருக்கிறார் டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார்.
பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி, என்னுயிர் நீதானே, கார்மேகம், அழகர்மலை, சுரா உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கும் டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், அடுத்து இயக்கும் படம்தான் பாக்கணும் போல இருக்கு. இயக்கத்தோடு நிறுத்தி விடாமல், கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் எழுதி அசத்தியிருக்கிறார் ராஜகுமார். இது, நகைச்சுவை கலந்த காதல் படம். கதாநாயகனாக புதுமுகம் பரதன் அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக கீத்திகா நடித்து இருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சூரி, முத்துக்காளை, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், விஜய் ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பூஜா என்ற மும்பை மாடல் அழகி, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஊட்டி, வால்பாறை பகுதிகளில் நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அருள்தேவ் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார். வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை ஆகிய படங்களை தயாரித்த எப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் இந்த படத்தை தயாரி்த்துள்ளார்.
No comments:
Post a Comment