ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று அத்தனை உள்ளங்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சென்னை மருத்துவமனையில் அவர் இருந்தபோது பேசிய சில விஷயங்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் அது என்று கிசுகிசுக்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்திலிருந்து.
நினைவு திரும்பிய சில சந்தர்ப்பங்களில், சத்திய நாராயணாவை கூப்பிடு. நான் அவனுக்கு ஒண்ணுமே செய்யல. அவனுக்கு ஏதாவது நான் செய்யணும் என்று கூறினாராம் ரஜினி. ஒருமுறையல்ல, பல முறை இதே வார்த்தைகளை அவர் கூறியதாக கிசுகிசுக்கிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக ஆரம்ப காலம் தொட்டு இருந்தவர் சத்யநாராயணாதான். பின்பு என்ன காரணத்தாலோ அங்கிருந்து வெளியேறினார். ரஜினி மருத்துவமனையில் இருந்த போது கூட இவர் அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை.
இதற்கிடையில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் இந்த முறை மருத்துவமனைக்கு வந்து ரஜினி குடும்பத்தினருடன் சேர்ந்து அவரை கவனித்துக் கொண்டார். இடையிடையே ரஜினி, நான் ராஜ்பகதூருக்கு ஒண்ணும் செய்யலையே என்று புலம்புவதை கேட்க முடிந்தது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.
ராஜாக்களா... நான் திரும்பி வந்து உங்களையெல்லாம் தலைநிமிர்ந்து வாழ வைப்பேன் என்று ரஜினி கூறியது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்த மாதிரி நண்பர்களுக்கும் சேர்த்துதான் போலிருக்கிறது!
No comments:
Post a Comment