சிவாஜி எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரு தரப்பு ரசிகர்களும் ஈகோவால் முட்டிக் கொள்கிற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் நண்பர்களாகவே இருப்பார்கள். ரஜினி-கமல், அஜீத்-விஜய், விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு என்று தொடர்கிறது அந்த மோதலும் ஈகோவும்.
படங்களில் சீன் வைக்கிற போதே இவர்களுக்காகவும் தனித்தனியாக யோசித்து சீன் எழுதி கைதட்டல் வாங்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஆனால் பாலா யதார்த்தவாதியாச்சே! நடிகர்களுக்காக வளையாத பேனா அவருடையது. அதற்கு பெரிய உதாரணம் அவன் இவன் படத்தில் வரும் ஒரு காட்சிதான்.
இப்படத்தில் சூர்யா முக்கியமான ஒரு ரோலில் நடித்திருக்கிறார். இன்றைய தேதியில் அவருக்கு பெரியளவுக்கு பிசினஸ் வேல்யூ இருந்தாலும், ஆர்யா விஷால் வயதோடும் மதிப்போடும் ஒப்பிட்டால் சென்ட்டி மீட்டர் அளவுக்கே அவர் உயரம். படத்தில் வரும் அந்த காட்சியில் ஆர்யாவும் விஷாலும் சூர்யா காலில் விழுவார்களாம்.
இந்த காட்சிக்கு ரசிகர்களின் ரீயாக்ஷன் எப்படியிருக்குமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். கம்பி மத்தாப்பூ எரியுதேன்னு கரண்ட் கம்பி எதுக்கு புகையணும். பொறுத்துக்க கத்துங்கோங்க ரசிகர்களே...
No comments:
Post a Comment