நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், வாந்தி பிரச்சினைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 29-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதில் குணம் ஏற்பட்டு வீடு திரும்பிய அவர் மீண்டும் 4-ந்தேதி அதே ஆஸ்பத்திரியில் நுரையீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது கண்ட றியப்பட்டது. காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு 5 தடவைக்கு மேல் ரத்தத்தை சுத்தம் செய்யும் “டயாலிசிஸ்” சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க ரஜினி குடும்பத்தினர் விரும்பினர்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் ரஜினிக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவ அறிக்கை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. “டயாலிசிஸ்” சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியுமா? என்று டாக்டர் குழுவினர் ஆலோசித்தனர். தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதென முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ஆபரேஷன் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினி நலமாக இருப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். ரஜினி பூரண குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment