போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செல் போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், கரூர் தொகுதி சட்ட மன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் செந்தில் பாலாஜி. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
இதனால் அவருக்கு வாழத்து சொல்ல அவரது செல்எண்ணான 94422 53345 என்ற எண்ணில் அதிமுக நிர்வாகிகள் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது முதல் அவரது செல் எண் சுவிட்ச் ஆப்பாக உள்ளதால், அவருக்கு வாழ்த்துக் கூட சொல்ல முடியாமல் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் கடும் சோர்வு அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற அமைச்சர்களுடன் நிர்வாகிகள் சர்வசாதாரணமாக பேசும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மட்டும் பேச முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், செந்தில் பாலாஜி வசம் பல செல் போன் எண்கள் உள்ளது. அதில் உண்மையான செல் எண்ணை கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஏதாவது தகவல் என்றால் கொடுக்க முடியும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தான் உத்தரவிடவேண்டும் என வேதனை பொங்க சொல்கின்றனர்.
No comments:
Post a Comment