திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையம், மருதுறை, பழையகோட்டை, வெங்கரையம் பாளையம், வெள்ளியம்பாளையம், குட்டப்பளையம், சக்கரபாளையம், கொளந்தபாளையம், சின்ன முத்தூர், போன்ற நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள ஊர்களில் திருமன வயதில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் பென்கொடுப்பதில்லை என்று குறை பட்டுக்கொள்கிரார்கள்.......
காரணம் என்ன...?
எல்லாம் இந்த நாசமாப்போன........ நொய்யல் ஆத்து தண்ணிதான் சாமி..., என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்..
கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்து மக்களையும், அவர்களின் கால்நடைகளையும், இரத்தமும், சதையுமாக இருந்து வாழ்வித்து கொண்டிருந்த நொய்யல் நதி இன்று இவர்களின் வாயில் நாசமாய் போனதாகிவிட்டது.
காரணம்.... திருப்பூர் சாயப்பட்டறைகள்...
1990,களில் திருப்பூரில் தொடங்கப்பட்ட நவீன சாயப்பட்டறைகள் நீன்டநாள் வெளுத்துப்போகாத பாஸ்ட் கலர் என்று சொல்லப்படும் சாயங்களை நூல்களுக்கு போட ஆரம்பித்தார்கள்.
நீண்ட நாட்களுக்கு சாயம் மங்காமல் இருக்கவும், சலவை செய்யப்படும் பனியன் துணிகளில் வெண்மை அதிகமாக இருக்கவும், வழக்கத்திற்கு அதிகமான இரசாயன பொருட்களை பயன்படுத்தி பிளிச்சிங் போட தொடங்கினார்கள், இப்படி நூற்றுக்கானக்கில் தொடங்கப்பட்ட சாயப்பட்டறைகள் தங்களின் கழிவுநீரை வெளிய்ற்றியாதன் விளைவு நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் கழிவு நீர் தேங்கியது.
முதலில் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் கிணறுகள் பாதிக்கப்பட்டன... பின்னர் ஆறு போகும் பாதையில் உள்ள எல்லா கிராமங்களின் கிணறுகளும் பாதிக்கப்பட்டன... கிணற்று நீரை குடிக்கும் மக்கள், கால்நடைகள், பறவைகள் எல்லாமே தொற்று நோய்க்கு ஆளானது.
கிணற்று நீர் பாசனம் செயப்பட்ட விளை நிலம் பாதிக்கப்பட்டது, அதில் வளரும் மரங்களும் செடி, கொடிகளும் தன்மை மாறியது, இதன் காரணமாய் இப்போது தோட்டத்து தென்னை மரத்தில் விளையும் தேங்காய் தண்ணீரை குடிப்பதற்கு கூட அந்த பகுதி மக்கள் பயப்படுகிரார்கள்..
விவசாயிகளின் நீன்ட நாள் போராட்டத்தை அரசு தட்டிகழித்து வந்த நிலையில், நீதி மன்றத்திற்கு போனார்கள் விவசாயிகளும், சுற்று சுழல் ஆர்வலர்களும், கடந்த ஜனவரி 28ம் தேதி சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.
அதன்படி இன்று வரை சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளது, இதனால் பனியன் அலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஈரோடு சந்தைக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தும் பனியன் ஜட்டிகளின் வரவு குறைந்துள்ளது, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு புதிதாக துணி எடுக்க செல்லும் பெற்றோர்கள் சரியான அளவுகளில் பனியன் ஜட்டிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சந்தர்பத்தை பயன்படுத்தி ஒருசில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள துணிகளுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.
தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு தலைமையில், திருப்பூரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதி மன்றம் சொல்லியுள்ளது போல ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கழிவு நீர் மாட்டுமே வெளியேற்றவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தார்கள்..
பனியன் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தரப்பில், கலந்து கொண்டவர்கள் சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யவே முடியாது, கழிவு நீர் குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கலக்க வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லியுள்ளர்கள்;
தண்ணீருக்கும், மண்ணுக்கும் தீங்கில்லாத மெல்லிய கலருடைய சாய வகைகளை நூலுக்கு போடவேண்டும், கண்ணை பறிக்கும் வென்மை வரவேண்டும் என்பதற்காக அதிகம் கலக்கப்படும் பிளீச்சிங் பவுடர்களை குறைதாலே போதும் என்று சொல்லும் இயற்கை ஆர்வலர்கள் தமிழக அரசு வெளிநாட்டு அறிஞர்களின் ஆலோசனையும் கேட்கவேண்டும் என்கிறார்கள்.
விவசாயிகளுக்கு மட்டுமல்ல... புதிய அரசுக்கும் பெரிய தலைவலி தான் திருப்பூர் சாயப்பட்டரைகள்.
No comments:
Post a Comment