சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 58வது தேசிய விருதுகளில், ஆடுகளம் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநர், நடிகர் உட்பட 6 விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு கமர்ஷியல் படத்திற்கு இத்தனை விருதுகள் நியாயமா?, எப்படி ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது கிடைக்கும், படத்தில் பின் பகுதியில் பல குறைகள் இருந்தன என்று பல கேள்விகள் கிளம்பியது.
இதுகுறித்த இயக்குநர் வெற்றிமாறன் பதில் சொல்லும் போது," முதல்பாதி, பின்பாதி என்று சிலருக்கு சில குறைகள் இருந்தது. எனக்கும் நான் செய்த தவறு தெரியவந்தது. அதை அடுத்தடுத்த படங்களில் சரி செய்திடுவேன். 6 விருது கொடுத்தது நியாயமா, நியாயம் இல்லையா என்று இப்போது கருத்து சொல்லும் நேரம் இல்லை. படம், தேர்வு செய்த நடுவர்களுக்கு பிடித்திருந்தது.ஒருவேளை நான் செய்த சிறுசிறு தவறுகளை அவர்கள் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அவார்டு கிடைக்கும் என்ற நோக்கோடு படம் எடுக்கவில்லை. கடைசிநாளில் தான் சப்-டைட்டில் போட்டு படத்தை அனுப்பி வைத்தோம். ஆகவே வேறு எந்த எண்ணமும் வேண்டாம். ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொடுத்திருக்கோம் என்று நினைக்கிறேன்"- என்று பேசி முடித்தார் இயக்குநர்.
இதனிடையே க்ளைவுட் நைன் மூவிஸ்க்காக மீண்டும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி தொடர்கிறது என்பது கூடுதல் தகவல்.
No comments:
Post a Comment