வரும் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் சபாநாயர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். ஜூன் 3ஆம் தேதி புதிய சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூடும்போது, ஆளுநர் பர்னாலா உரையாற்ற உள்ளார்.
அன்றைய தினம் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜூன் 6ம் தேதியில் இருந்து விவாதம் நடைபெறும். இந்த விவாதம் 5 நாட்கள் முதல் ஒருவாரம் வரை நடைபெறலாம்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூன் 7ஆம் தேதி 2011-2012ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் மீதான பொதுவிவாதமும், அதைத் தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறும்.
புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தயாரிப்பு குறித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment