இத்தாலியில் உள்ள பழம்பெரும் யு.யு.பி.என் பல்கலைக்கழகம், நடிப்பில் சிறந்து விளங்குவதற்காக நடிகர் விக்ரமிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
கதைக்கேற்றவாறு வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்துபவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, உள்ளிட்ட படங்களில், யாரும் ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் விக்ரம், தைரியமாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். குறிப்பாக பிதாமகன் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்படி நடிப்பில் அசத்தி வரும் விக்ரமை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது இத்தாலியில் உள்ள யு.யு.பி.என்., பல்கலைக்கழகம். இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மிக பழமையான பல்கலைக்கழகமும் இதுதான். இந்த பல்கலைக்கழகத்தில் மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெயரும் உண்டு.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடிப்பிற்காக, டாக்டர் பட்டம் வாங்கும் ஒரே இந்திய நடிகர், நம்ம சீயான் விக்ரம் தான். பல்கலைக்கழக தலைவரும், பேராசிரியருமான டாக்டர் மார்கோ கிரேபிசியா, துணை தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அனைவரது முன்னிலையில் நேற்று (29.05.11) அன்று, விக்ரமிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment