கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி விடுதியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு எஸ்.எம்.எஸ்.தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்பது வேதனைக்குரியது.
கல்லூரி மாணவி
மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் மீனலோஷினி. இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏ.எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.
செல்போன் எடுக்கவில்லை
நேற்று காலை மீனலோஷினியுடன் படிக்கும் ஜோசன் எனும் மாணவர் அந்த விடுதிக்கு வந்தார். விடுதி வார்டனிடம் மீனலோஷினியின் செல்போன் எண்களை பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. அவர் அறையில் இருக்கிறாரா என பார்க்கச் சொன்னார்.
தற்கொலை
இதனை அடுத்து மீனலோஷினியின் அறைக்குச் சென்ற வார்டன் அறை உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் தட்டினார். அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த வார்டன் தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு அறையினைத் திறந்தார். உள்ளே மீனலோஷினி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடிதம்
தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் மீனலோஷினி தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், தன் தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும், மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தால் உனக்கே மகளாகப் பிறக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தது.
தற்கொலைக்கு என்ன காரணம்?
மீனலோஷினி தன்னுடன் படித்து வந்த சக மாணவரைக் காதலித்து வந்தார். அவர் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறு எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது, சக மாணவிகளிடம் கூடப் பேசக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு வைத்திருந்தார். காதலரும் அதை தட்டாமல் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மீனலோஷினியின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதை சீனியர் மாணவர் ஒருவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனலோஷினியிடம் பேசிய அவரது காதலர் எனக்கு மட்டும் கண்டிஷன் போடுகிறாயே, இது மட்டும் நியாயமா என்று கேட்டு சண்டை பிடித்துள்ளார்.
இதனால்தான் அவமானமுற்று மீனலோஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment