அதென்னவோ தெரியவில்லை. விஜய்க்கும் வெளிநாட்டு தமிழர்களுக்குமான உறவு தண்ணீரில் ஊற வைத்த அப்பளம் போல சவசவ என்றுதான் இருக்கிறது. அதில் மேலும் தண்ணீர் ஊற்றி ஈரப்பதம் கெடாமல் பார்த்துக் கொள்கிறார் அவரும்.
எப்போது விஜய் படம் வெளிவந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும் வெளிநாட்டு தமிழர்கள் மொக்கை ஜோக்குகளை வெளியிட்டு அவரது தீவிர ரசிகர்களுக்கு கோவப்பழ ஜுஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் காங்கிரசில் இணைவதாக முடிவெடுத்த நேரத்தில் அதன் வேகம் இன்னும் கூடி 'விட்ரு... அழுதுருவேன்' என்கிற அளவுக்கு ஆனது நிலைமை. எப்படியோ அதிலிருந்து மீண்ட விஜய், அந்த கறையை போக்க நிஜமான உண்ணாவிரதமெல்லாம் இருக்க நேர்ந்தது.
தற்போது வந்திருக்கும் பிரச்சனைதான் என்ன? வட அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ் சங்கம் சார்பாக அழைக்கப்பட்டாராம் விஜய். போக்குவரத்து செலவு, தங்குமிடம் இரண்டு மட்டும் எங்கள் செலவு. மற்றபடி உங்கள் வருகை. எங்களுக்கு பெருமை என்று அழைத்தது சங்கம். சில மாதங்களுக்கு முன்பு வருவதாக ஒப்புக் கொண்ட விஜய், நிகழ்ச்சி நெருங்கும் நேரத்தில் 25 லட்சம் கொடுத்தால்தான் வருவேன் என்கிறாராம்.
உங்களை நம்பி இங்கிருக்கிற சொந்தங்களிடம் சொல்லிட்டோம். இப்ப இவ்வளவு பணம் கேட்டா என்ன செய்யுறது என்கிறார்களாம் அவர்கள். பேச்சு வார்த்தையின் முடிவு டொய்ங்க்! (தொடர்பு இழையே அறுந்து போச்சுங்க)
http://worldcinemasites.blogspot.com/2011/05/hindi-movie-ready-is-ready-on-june-03.html
ReplyDelete