சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் இருக்கிற வித்தியாசத்தை கே.வி.ஆனந்த்தை கொண்டுதான் அளக்க வேண்டும்! இப்படி சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறது கோலிவுட். ஏனாம்?
படத்தின் ஹீரோயினை மாற்றுங்க என்று சிம்பு சொன்ன போது சிம்புவையே மாற்றிவிட்டு தனது டைரக்டர் ஆளுமையை நிலை நிறுத்தியவர் கே.வி.ஆனந்த். கோ படத்தின் போது நடந்த இந்த சம்பவம் அவர் மீது தனிப்பட்ட மரியாதையையும் ஏற்படுத்தியிருந்தது ரசிகர்கள் மத்தியில். அதே ஆனந்த், சூர்யா சொன்னார் என்பதற்காக அடக்க விலையை விட அதிகம் கொடுத்தாராம் ஒரு நடிகைக்கு!
கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான் படத்தில் சூர்யாதான் ஹீரோ. இதில் ஐந்து வேடங்களில் நடிக்கிறாராம் சூர்யா. இவருக்கு யாரை ஜோடியாக்குவது என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. யார் பெயரை சொன்னாலும் சூர்யாவுக்கு அதில் திருப்தி இல்லாமல் இருந்ததாம். நீங்களே சொல்லுங்க என்று பொறுப்பை அவர் தலையில் கட்டினார் ஆனந்த்.
மஹதீரா படத்தை பார்த்ததிலிருந்து காஜல் அகர்வால் மீது ஒரு கண் வைத்திருந்த சூர்யா, அவரையே பேசிப் பாருங்க என்றாராம். அதற்குள் தகவல் காஜலின் காதுகளுக்கு போய்விட்டது. இந்த நேரத்தில் சம்பளத்தை ஏற்றினால்தான் உண்டு என்பதால் கூசாமல் ஒரு கோடி கேட்டாராம். முதலில் அதிர்ச்சியான கே.வி.ஆனந்த், சூர்யாவுக்காக சம்மதித்தாராம்.
அவசியம் ஏற்பட்டா அமாவாசைக்கும் பெயிண்ட் அடிச்சு நிலாவாக்குவான் புத்திசாலி!
http://worldcinemasites.blogspot.com/2011/05/hindi-movie-ready-is-ready-on-june-03.html
ReplyDelete