திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் - இயக்குநர் பாபு கணேஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை சிட்டி கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தும் வரை எஸ்.ஏ.சி. நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பாபு கணேஷ் தனது குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவில கோர்ட், எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி தொடர தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்கவும் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment