தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தின் உரிமையை தனியார் டிவிக்கு ரூ.52 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த கன்னட நடிகர் கைது செய்யப்பட்டார். கன்னட திரைப்படங்களான "நாவு நம்ம ஹெந்திரு, "கழாகார் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் ஹரீஸ் ராஜ். தற்போது "கன் என்ற படத்தை இயக்கி வரும் இவர், அந்த படத்தின் கதாநாயகனாவும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் முரளி இந்த "கன் படத்தை தயாரித்து வருகின்றார். கடந்த 12ம்தேதி பெங்களூரு போலீசில் தயாரிப்பாளர் முரளி, நடிகர் ஹரீஸ்ராஜ் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், "கன் படத்தின் தயாரிப்பாளராக உள்ள நான், இதுவரைக்கு ரூ.2 கோடிக்கும் மேல் படத்தை உருவாக்க செலவு செய்து உள்ளேன். இந்த நிலையில், நடிகர் ஹரீஸ்ராஜ், "கன் படத்தின் டி.வி. உரிமையை எனக்கே தெரியாமல் தனியார் டிவிக்கு ரூ.52 லட்சத்திற்கு விற்று மோசடி செய்து விட்டார். மேலும் தன்னிடம் வாங்கிய ரூ.30 லட்சம் கடனை திரும்ப கொடுக்காமல் இருப்பதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நடிகர் ஹரீஸ் ராஜை கைது செய்த போலீசார், ஏற்கனவே அவர் முன்ஜாமீன் வாங்கி வைத்திருந்ததால் உடனடியாக விடுவித்தனர்.
No comments:
Post a Comment