'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் 'மாப்பிள்ளை' படத்தில் இவருடைய டப்பிங் சரியில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' படம் வெளிவந்தது. அப்படத்தில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. தற்போது விஜய்யுடன் இணைந்து 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறார்.
தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறார் ஹன்சிகா. இனிமேல் எந்த படத்திலையும் இரண்டாவது நாயகியாக நடிக்க மாட்டாராம். முதல் நாயகியாக, அதுவும் நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இவரது இந்த முடிவை பார்க்கும் போது 'காதல்' படத்தில் வரும் " நடிச்சா ஹீரோ சார்...இல்லாட்டி நான் வெயிட் பண்றேன் சார்" என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது
No comments:
Post a Comment