நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சச்சினும், டோணியும் விரைவில் விமானப் படையின் எஸ்யூ-30 எம்கேஐ பைட்டர் ஜெட்களில் பறக்கவிருக்கின்றனர்.
இது குறி்த்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகையில், "சச்சின், டோணி ஆகிய 2 பேரையும் எஸ்யூ-30 விமானத்தில் அழைத்துச் செல்லும் எங்கள் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அவர்கள் பயணிக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் இருவருக்கும் எப்பொழுது வசதி என்று கேட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்றனர்.
சச்சினையும், டோணியையும் பைட்டர் ஜெட்டில் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு இந்திய விமானப் படை அரசிடம் மனு அளித்தது.
இந்த ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு சச்சினையும், டோணியையும் எஸ்யூ-30 எம்கேஐ பைட்டர் ஜெட்டில் அழைத்துச் செல்ல அரசிடம் அனுமதி கேட்கப்போவதாக இந்திய விமானப் படை தளபதி ஏர் மார்ஷல் பி.வி. நாயக் கூறியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே எங்கள் குழுவின் கௌரவ தலைவராக உள்ளார். சச்சின், டோணி ஆகிய இருவருக்கும் நேரம் கிடைக்கையி்ல் அவர்களை நிச்சயமாக பைட்டர் ஜெட்டில் அழைத்துச் செல்வோம். அவர் நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர்கள். அவர்களை அழைத்துச் செல்வதில் எங்களுக்கு பெருமை என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோணி விளையாடுகிறார். சச்சின் சொந்த விஷயமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்த பைட்டர் ஜெட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமும், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் சென்றுள்ளனர்," என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment