சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தியாகராஜன் நடித்து வெள்ளி விழா கண்ட "மலையூர் மம்பட்டியான்" படம், மீண்டும் அவரது மகன் பிரசாந்த் நடிப்பில் "மம்பட்டியான்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. தியாகராஜனே படத்திற்கு டைரக்ஷன் பொறுப்பு ஏற்றிருக்கிறார். இப்படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக சரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானும், சில்க் நடிக்க வேடத்தில் மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஜெய்சங்கர் நடித்த வேடத்தில் பிரகாஷ் ராஜ், கவுண்டமணி வேடத்தில் வடிவேலு, சங்கிலி முருகன் நடித்த போலி மம்பட்டியான் வேடத்தில் ரியாஸ்கான், பண்ணையாராக செந்தாமரை நடித்த வேடத்தில் கோட்டா சீனிவாசராவ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
மம்பட்டியான் படத்திற்காக நீண்ட திலைமுடி, பிரத்யேகமான உடற்கட்டு என்று அசல் அப்பா தியாகராஜன் நடித்தது போன்றே நடித்திருக்கிறார் பிரசாந்த். இந்தியாவில் உள்ள காடுகளை தவிர நியூசிலாந்து, தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆப்ரிக்க போன்ற நாடுகளில் உள்ள காடுகளிலும் படமாக்கி இருக்கின்றனர். மம்பட்டியான் படத்திற்காக ரொம்பவே ரிஸ்க் எடுத்து ஓய்வின்றி நடித்திருக்கிறார் பிரசாந்த். இந்தபடத்தில் மற்றொரு சிறப்பம்சமாக சிம்பு ஒரு பாடல் பாடி இருக்கிறார். படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதி திரையிட முடிவெடுத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment