கடந்த தி.மு.க ஆட்சியில் சினிமா படத்தின் பெயர்கள் தமிழில் இருந்தால் கேளிக்கை வரி ரத்து என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்று இருப்பதால் அச்சட்டம் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்விக்குறி உருவாகியுள்ளதாம். இது வரை பல படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகையை கேட்டு வரும் விண்ணப்பங்கள் பரீசீலிக்காமல், பதிலும் சொல்லாமால் இருக்கிறார்களாம்.
சமீபத்தில் வெளியான பல படங்கள் கூட இதற்கு சான்றாக இருக்கிறது. இதுவரை ஜெயேந்திரா இயக்கிய படத்திற்கு 180 என்று தான் தலைப்பு இருந்தது. கடந்த ஒரு வாரமாக தான் நூற்றெண்பது என்று தலைப்பு மாற்றி இருக்கிறார்கள்.
அதுபோலவே சினேகன் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு உயர்திரு 420 என்று தலைப்பு வைத்து இருந்தார்கள். ஆனால் நேற்று நடந்த இசை வெளீயிட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட டிரெய்லரில் உயர்திரு நானூற்றி இருபது என்று மாற்றி இருக்கிறார்கள்.
இதற்கு பின்பு வெளிவர இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் கூட கடும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். கேளிக்கை வரி உண்டா இல்லையா என்பதை தமிழக அரசு கூடிய விரைவில் அறிவிக்க வேண்டும் என்று விரைவில் கோரிக்கையாக வைக்க இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment