கமலின் அடுத்தபடமான விஸ்வரூபம் படத்தில் ஏற்கனவே பாலிவுட்டின் இளம் நாயகி சோனாக்ஷி சின்ஹா ஜோடி போட்டுள்ள நிலையில், மற்றொரு பாலிவுட் நடிகையையும் கமலுடன் ஜோடி போட இருக்கிறார். கமலின் நடிப்பு மற்றும் டைரக்ஷனில் விரைவில் உருவாக இருக்கும் படம் விஸ்வரூபம். இந்தபடத்தில் கமலுக்கு ஜோடியாக சத்ரூகன் சின்காவின் மகளும், பாலிவுட்டின் இளம் நாயகியான சோனாக்ஷி சின்கா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்க இருக்கிறாராம். இந்த கேரக்டருக்கு முதலில் ஸ்ரேயாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமலோ ஸ்ரேயா வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதற்கு காரணம் ஸ்ரேயாவுக்கு கதக் நடனம் சரியாக வராததால் கமல் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஸ்ரேயா கேரக்டருக்கு பதிலாக பாலிவுட்டில் இருந்து மற்றொரு நடிகையை கமல் நடிக்க வைக்க இருக்கிறார். அந்த நடிகை வேறு யாரும் அல்ல பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்டவரும், "லக் பை சான்ஸ்" உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான இஷா சர்வானி தான் அந்த நடிகை. இஷா சர்வானியை கமல் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அவர் ஒரு சிறந்த டான்சரும் ஆவார். ஆகையால் தான் இஷா சர்வானியை, தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார் கமல். ஆகஸ்ட் மாதம் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் துவங்க இருக்கிறது.
No comments:
Post a Comment