கவிஞர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கும். ஆனால் பெரும்பாலான கவிஞர்கள் அதற்குள் மூழ்கி மூச்சடைப்பதில்லை. தாமரை இலையும் தண்ணீரும் போல பட்டும் படாமலும் பகட்டு காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கண்ணதாசன், புலமைப்பித்தன் போன்ற கவிஞர்கள் நேரடி அரசியலிலும் ஈடுபட்டதுண்டு. நான் அரசியல் சார்ந்தவன் இல்லை என்று பா.விஜய் முகத்தை மூடிக் கொண்டாலும், அதன் மேல் கருப்பு சிவப்பு கலரை தடவிதான் பார்க்கிறது உலகம்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களை பாராட்டி ஒரு கவிதை எழுதி தனக்கான நாற்காலியின் ஸ்கூருக்களை டைட்டாக முடுக்கிக் கொள்வதில் சமர்த்தர் வாலி. கடந்த ஆட்சியில் வேறு விதமாக பாடிய அவரது நாக்கு, இப்போது ரங்கநாயகிக்காக துடித்துக் கொண்டிருப்பதை நாடு காமெடியாக பார்த்தாலும், கவிதை ரசிகர்களுக்கு அது இனிக்கதான் செய்கிறது.
எல்லா காலத்திலும் தனது எழுத்துக்களை இளமையாக்கிக் கொள்கிற விதத்தில் வாலி ஒரு வசீகரர்தான் என்றாலும், அரசியல் ஆலோசகராகவும் விளங்குகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது அவரது சமீபத்திய நடவடிக்கைகள். கடந்த வாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் வாலியை சந்தித்தாராம். இருவரும் நான்கு மணி நேரம் அமர்ந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்கள்.
அதில் பாதி அரசியல்தானாம்.
No comments:
Post a Comment