நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குடிபோதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் வேண்டும் என்றே தப்ப விட்டனர். தங்கள் கண் எதிரே நடந்த இந்த அதிகார சலுகையை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை புதிய பஸ் நிலையம் நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. அப்போது தென்காசி பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் நடுவே இருந்த நாற்காலியில் 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஆக்கரமித்திருந்தார். அவர் நல்ல மப்பில் இருந்தார். ஆபாச சைகைகள் மூலம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்து கொண்டிருந்தார். அருகில் இருந்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஊரை சேர்ந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தவர் திடீரென அப்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்தார்.
இதனால் நிலைகுலைந்த அப்பெண் ஆத்திரத்தில் அவரை திட்டியதோடு அருகில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசார் வருவதற்குள் அங்கிருந்த நழுவிய போதை ஆசாமி அடுத்த வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த பாப்பாக்குடியை சேர்ந்த பெண்ணிடம் தனது கைவரிசையை காட்ட முயன்றார். அத்துடன் நில்லாமல் நெரிசலில் தழும்பி வழித்த பாபநாசம் பஸ்சில் முன்பக்கம் ஏறி பெண்களை இடித்து கொண்டு நின்றார். இதனால் பெண்கள் மிரண்டனர்.
அதற்குள் போலீசார் அவரை பிடித்து விட்டனர். தன்னை தள்ளிகொண்டு சென்ற போலீசாரிடம் அந்த தள்ளாட்ட பேர்வழி தானும் ஒரு காக்கிசட்டைகாரர் என்பதையும், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ளதையும் போட்டுடைத்து விட்டார்.
அடுத்த விநாடி தோழமை உணர்வால் சுதாரித்து கொண்ட போலீசார் அவரை தப்ப விட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும், அத்துமீறலாகவம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை புறக்கணித்து விட்டு கண் எதிரே அவரை தப்பவிட்ட போலீசார் செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ஆசாமி வேட்டியை அவிழ்த்துவிட்டு அதை தரையில் இழுத்துக் கொண்டே நடந்து சென்றார்.

No comments:
Post a Comment