அரசியல்வாதிகளாக இருப்போர், தேசிய கிரிக்கெட் வாரியங்களில் பொறுப்புகளை வகிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தடை விதித்துள்ளது.
தேவையில்லாமல் அரசியல் தலையீடுகள் கிரிக்கெட் வாரியங்களில் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஐசிசி எடுத்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்திய கிரிக்கெட் வாரியமாகத்தான் இருக்கும். இங்குதான் தடுக்கி விழுந்தால் அரசியல் கிரிக்கெட் பொறுப்பாளர்கள் நிறையப் பேர் உள்ளனர்.
இகதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாங்காங்கில் நடந்த ஐசிசி வருடாந்திர மாநாட்டில், கிரிக்கெட்டை அரசியல் சார்பற்ற, களங்கமற்ற விளையாட்டாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி தேசிய கிரிக்கெட் வாரியங்களில் அரசியல்சார்புடையவர்களை பொறுப்புகளில் நியமிக்கக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட இது உள்ளிட்ட முடிவுகளை 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2013 ஜூன் மாதத்திற்குள் அமல்படுத்திடவும் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்த ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியமாவது அரசியல் சார்புடையவர்களை பொறுப்பில் நியமித்தாலோ அல்லது எந்த ஒரு நாட்டின் அரசு நிர்வாகத்தின் குறுக்கீடு கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் குறுக்கிட்டாலோ, அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை ஐசிசி மேற்கொள்ளும்.
இந்த நடவடிக்கையால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது சஷாங் மனோகர் உள்ளார். அவர் அரசியல் சார்பற்றவர். அதேசமயம், காங்கிரஸ் மற்றும் பாஜக தொடர்புடையவர்கள் சிலர் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் கடும் பாதிப்பை சந்திக்கும். அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய காப்பாளராக அதிபர் சர்தாரி இருக்கிறார். அதேபோல இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களிலும் அந்த நாட்டின் அரசியல்வாதிகள் பலர் நேரடித் தொடர்பு வைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த அதிரடி நடவடிக்கை அவசியமானதே என்று ஐசிசியின் தலைமை தலைமை செயலதிகாரி ஹாரூன் லோர்காட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிஃபா அரசியல் சார்பற்ற அமைப்பாக உள்ளது. அதேபோல உறுப்பு நாடுகளின் கால்பந்து வாரியங்கள் அரசியல் சார்புடன் செயல்பட்டால் உடனடியாக அவை சஸ்பெண்ட் செய்யப்படும். அதேபோலத்தான் பிற சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் உள்ளன. அதே போல தேசிய கிரிக்கெட் வாரியங்களை மாற்றும் நடவடிக்கையே இது என்றார்.

No comments:
Post a Comment