தமிழ் திரையுலகில் சசிக்குமார் - சமுத்திரக்கனி இருவரும் தான் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு இணையாக சிம்பு - கெளதம் வாசுதேவ் மேனன் நட்பு இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கெளதம் வாசுதேவ் மேனன் - சிம்பு இருவரும் இணைந்த படம் ' விண்ணைத்தாண்டி வருவாயா'. பஞ்ச் டயலாக், ஸ்டைல் மற்றும் சண்டைக்காட்சிகள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்த சிம்புவை வேறு தளத்திற்கு கொண்டு சென்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்றால் அது மிகையல்ல.
'விண்ணைத்தாண்டி வருவாயா' ஷூட்டிங்கின் போது சிம்புவின் நடிப்பைப் ரசித்த கௌதம் மேனன், சிம்பு நடிக்க அதை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பப்பட்டாராம். அப்படமே சிம்புவிற்கு இந்தியில் முதல் படமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இந்தி ரீமேக்கில் நடிக்க சொல்ல, சிம்புவோ இந்தி திரையுலக பிரவேசம் இப்போது வேண்டாம், அப்பறம் பாத்துக்கலாம் என்று தவிர்த்து விட்டாராம்.
தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, அதன் இந்தி ரீமேக்கில் நடித்து இந்தியில் அறிமுகமாகி இருக்கலாமே என்று நினைத்தாராம் சிம்பு.
சிம்புவை எப்படியாவது இந்தியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறாராம் கெளதம்.
தற்போது இந்தியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கி வரும் கெளதம், அப்படத்தை அடுத்து தமிழில் ஒரு டி.வி. சீரியலும், ஒரு படமும் இயக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment