விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அதிபர் ராஜபக்சே பராமரித்து வருவதாக தாம் கூறியதற்கு ஏ.எச்.எம்.அஷ்வர் எம்பி மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரபாகரன் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டாலும், அவரது குடும்பத்தினரைக் காப்பாற்றி ராஜபக்சே பராமரித்து வருகிறார் என நாடாளுமன்றத்தில் அஷ்வர் கூறியிருந்தார்.
இதனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அஷ்வர், "தாம் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பிரபாகரனின் பெயரை தவறாகக் குறிப்பிட்டு விட்டதாகத்" தெரிவித்துள்ளார்.
ஆனால் நேற்று முன்தினம் அவர் பாராளுமன்றத்தில் பேசியபோது, பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் குறிப்பிட்டு, உயிருடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment