மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று நடைபெற்றது.
வைகோ உட்பட மதிமுக வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் நாஞ்சில் சம்பத் பேசும்போது,
‘’இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பேச்சாளருக்கு எதிராக அதிக வழக்குகளை சந்தித்த ஒரே பேச்சாளர் நானாகத் தான் இருப்பேன்.
அதற்காகவே எனக்கு ஒரு விருது இந்திய அரசு தர வேண்டும். 40 வருடங்களுக்கு பிறகு வைகோ
வக்கீல் கோட் போட்டது எனக்காகத் தான்.
என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். என்னை அந்த வழக்கில்
இருந்து காப்பாற்றியவர் வைகோ.
வக்கீல் தொழிலை 40 வருடங்களுக்கு பிறகு எனக்காக செய்தார். ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு இந்திய
அரசியல் தலைவர் ஒருவர் நீதிமன்றம் சென்று வழக்காடினார் என்றால் அது வைகோ தான்.
தி. மு. க. , அ. தி . மு. க .விற்கு மாற்று சக்தியாக நாம் மாறுகிறோம். இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று அழிவது அவசியம்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment