மும்பை அருகே உள்ள கர்னாலா என்ற இடத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் தனது மகன் அர்ஜூன் தங்குவதற்கு வசதியாக ஒரு பெட்ரூமுடன் கூடிய ஒரு வீட்டை வங்கியில் கடன் தொகை பெற்று வாங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள் கூறுகின்றன.
மும்பையிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்னாலா. இதற்கு அருகில் உள்ள இடம் பான்வல்.
கர்னாலாவில் உள்ள கர்னாலா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தற்போது சச்சினின் மகன் அர்ஜூன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக, தனது மகன் தங்குவதற்கு வசதியாக பான்வல் என்ற இடத்தில் ஒரு சிறிய ஃபிளாட்டை விலைக்கு வாங்கியுள்ளார் சச்சின்.
ஒரு படுக்கை அறையுடன் கூடிய இந்த பிளாட்டின் மதிப்பு ரூ. 24.88 லட்சமாகும். 467 சதுர அடி உடையது. இந்த ஃபிளாட்டை வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளார் சச்சின் என்பதுதான் சுவாரஸ்யமானது.
சமீபத்தில்தான் மும்பையின் காஸ்ட்லி பகுதிகளில் ஒன்றான பந்த்ராவில், பெர்ரி கிராஸ் சாலையில் ரூ. 39 கோடிக்கு ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கினார் சச்சின். பின்னர் மேற்கொண்டு ரூ. 40 கோடியை செலவழித்து அந்த பங்களாவை அலங்கரித்தார்.
இந்த நிலையில் தனது மகன் தங்குவதற்காக சிறிய ஃபிளாட்டை வங்கிக் கடன் தொகை மூலம் சச்சின் வாங்கியுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

No comments:
Post a Comment