தமிழ்நாடு இயக்குனர் சங்கம் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை நடைபெற்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் கடும் போட்டிகள் இருந்தன.
முக்கியமாக ''புதிய அலைகள்'' என்று பெயருடன் உதவி இயக்குனர்கள் அணி, 12 செயற்குழு உறுப்பினர்கள் பதிவிகளுக்கு போட்டியிட்டது. .
வசந்தபாலன், சிம்புதேவன், கதிர், வெங்கட்பிரபு, பாலசேகரன், ஏ.வெங்கடேசன், இயக்குனர் விஜய் ஆகிய முன்னணி இயக்குனர்களை எதிர்த்துக் களம் இறங்கிய இந்த 'புதிய அலைகள்' கொஞ்சம் ஆவேசம் காட்டியிருக்கின்றன. 12 பதவிகளில் 7 இடங்களில் வென்றிருக்கிறது 'புதிய அலைகள்'.
எப்போதும் இல்லாத அளவுக்கு இயக்குனர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக 12ல் 7 இடங்களில் வெற்றி அடைந்து இருப்பதால் கடும் சந்தோஷத்தில் இருந்தாலும், நமக்கு புதிய தலைவலியாக 'புதிய அலைகள்' அணி உருவாகி விட்டதே என்று மீதம் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
'புதிய அலைகள்' அணிக்கு இத்தனை பெரிய வெற்றிக் கிடைக்க காரணம் அவர்களது தெளிவான பார்வையும், வேகமான அணுகுமுறைதான் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

No comments:
Post a Comment