பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் கிடைத்த செல்போன்கள் மூலம், அவனுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இருந்த நெருங்கிய உறவுகள் குறித்து தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அதிரடியாக தாக்கி அழித்தனர். அந்த வீட்டில் பல முக்கியப் பொருட்களையம் அவர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
அதில் ஒரு செல்போனும் அடக்கம். அந்த போன் மூலம் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த செல்போன் பின்லேடனுக்கு நெருக்கமான கூரியர் நபரிடமிருந்து எடுக்கப்பட்டதாகும். அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலின்போது அந்த கூரியர் நபரும் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து சிக்கிய இந்த செல்போனில், ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பினருடன் பின்லேடனுக்கு இருந்த நெருக்கமான உறவு தெரிய வந்துள்ளது.
இந்த செல்போன் தகவல் மூலம், ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பின் உதவியுடன்தான் பாகிஸ்தானில் பத்திரமாக இருந்துள்ளான் பின்லேடன் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே பின்லேடனுக்கு ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவும் கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ள நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பின் சார்பில் ஹர்கத் அமைப்பு பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்து பத்திரமாக பாதுகாத்து வந்ததா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தபடி ஹர்கத் அமைப்பை செயல்பட வைத்ததில் பெரும் பங்கு ஐஎஸ்ஐக்கு உண்டு. இந்த அமைப்பை உருவாக்கி வளர்த்த பெருமையும் ஐஎஸ்ஐக்கு உண்டு. இதுநாள் வரை இவை அனைத்தும் வெறும் குற்றச்சாட்டுக்களாகவே இருந்தன. தற்போது ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அல் கொய்தாவின் மிக நெருங்கிய பழைய கூட்டாளிதான் இந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு. மேலும் ஐஎஸ்ஐக்கும் இந்த அமைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. ஐஎஸ்ஐயின் நிழலாகவே இது பார்க்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்டுள்ள செல்போனிலிருந்து பல ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் பின்லேடன் தொடர்பானவையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

No comments:
Post a Comment