சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட ஒசாமா பின்லேடன் கடைசியாக எழுதிய கடிதம் ஒன்றை பாகிஸ்தானில் அவர் பதுங்கி இருந்த வீட்டின் காம்பவுண்ட் அருகே இருந்து அமெரிக்க படைகள் கைப்பற்றி உள்ளன. அந்த கடிதத்தில், தன்னுடைய இயக்கத்தின் பெயரை அல் குவைதா என்பதை மாற்ற ஒசாமா பின்டேன் விரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன், அமெரிக்காவின் படையினரால் மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒசாமாவின் மரணத்திற்கு பின் அவன் பதுங்கி இருந்த வீடு அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வீட்டை முழுமையாக ஆய்வு செய்து வரும் அமெரிக்க படைகள் ஒசாமாவின் கடைசி கடிதத்தை கைப்பற்றி, வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அல்குவைதா இயக்கம் பொதுமக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மக்களிடையே இயக்கத்தின் மீதான நன்மதிப்பை இழந்து வருகிறது; இழந்த நற்பெயரை மீட்கவும், இயக்கத்திற்காக வருமானத்தை பெருக்குவதற்காகவும், அல்குவைதா இயக்கத்தின் மீதான அமெரிக்க படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்; அதற்காக பிளாக்வாட்டர்,வால்யு ஜெட், பிலிப் மோரீஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை ஒன்றை தேர்வு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்., உளவுத்துறை-ஒசாமா தொடர்பு அம்பலம் :அல்குவைதா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தானின் உளவு பிரிவினரிடம் தொடர்பு வைத்திருந்ததை அவர் பயன்படுத்திய மொபைல்போன் மூலம் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்லேடன் பயன்படுத்திய மொபைல் போனிற்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரிக்க துவங்கினர்.அப்போது அல்குவைதாவிற்கும் ஹராகத் உல் முஜாகிதீன் என்ற அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த அமைப்பினர் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பின்லேடன் பாக்.,உளவு அமைப்பினரிடமும் தொடர்ப்பு வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது என்று அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ஒசாமா மற்றும் அல்குவைதா இயக்கம் குறித்த மேலும் பல தகவல்களை கண்டறியும் பணியில் அமெரிக்க படைகள் தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment