ரீசார்ஜ் கமிஷன் தொகையை செல்போன் நிறுவனங்கள் குறைத்துள்ளதைக் கண்டித்து சென்னை மற்றும் புறநகர்களில் செல்போன் விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் ரீசார்ஜ் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன.
இதுவரை 3.8 சதவீதமாக இருந்து வந்த கமிஷன் தொகையை தற்போது 3.3 சதவீதமாக குறைத்துள்ளனர். இதற்கு செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் செல்போன் நிறுவன ஏஜென்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கமிஷன் குறைப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இன்று ரீசார்ஜ் செய்யப்பட மாட்டாது என்றும் அவர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது.
புதிய செல்போன் இணைப்பு விற்பனை, ரீசார்ஜ் ஆகிய பணிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் ரீசார்ஜ் தேடி கடைகளுக்கு வருவோர் ஏமாந்து செல்கின்றனர்.
மாலை 6 மணி முதல் இந்த ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment