லோக்பால் சட்ட மசோதாவை உருவாக்குவதில் பட்ட அனுபவம் போதும். எதிர்காலத்தில் இனிமேல் இதுபோன்ற மசோதா உருவாக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல்.
லோக்பால் சட்ட மசோதாவை வடிவமைப்பது தொடர்பாக அன்னா ஹஸாரே தலைமையிலான சமூக சேவகர்கள் அடங்கிய மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது மத்திய அரசு. மத்திய அரசு அமைத்த குழுவில் கபில் சிபலும் ஒருவர். ஆனால் ஹஸாரே குழுவினர் பரிந்துரைத்த கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசு திக்குமுக்காட வைத்து விட்டது. குறிப்பாக லோக்பால் வரையறைக்குள் பிரதமரை சேர்த்தே ஆக வேண்டும் என அவர்கள் பிடிவாதமாக கூறியதால் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த நிலையில் இனிமேல் மசோதாக்கள் உருவாக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளை சேர்ப்பதற்கான வாய்ப்பில்லை என்று சிபல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்பால் மசோதா உருவாக்கப்பட்ட பின்னர் அது அரசியல் கட்சிகளின் கருத்துக்கு விடப்படும். பின்னர் மக்கள் பிரதிநிதிகளுன் கருத்துகளும் கோரப்படும்.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை அறிய வேண்டிய நிலைக்கு அரசைத் தள்ளி விட்டனர். இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது. மசோதா உருவாக்கத்தில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த நிலை மீண்டும் ஏற்படாது.
லோக்பால் மசோதாவுக்கு மட்டும்தான் இந்த நிலை. இது தொடராது என்பது எனது எதிர்பார்ப்பு.
அமைச்சர்கள் குழு உருவாக்கியுள்ள லோக்பால் வரைவு மசோதா என்பது இறுதியானதல்ல. அதில் மாற்றங்களும் வரலாம். அதன் பின்னரே இறுதி மசோதா உருவாக்கப்படும்.
ஆகஸ்ட் 16ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹஸாரே கூறியிருப்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. விரும்பவில்லை. அந்த சமயத்தில் அந்த சூழலை அரசு சமாளிக்கும், எதிர்கொள்ளும்.
ஒரு நாட்டுக்கு எது நல்லது என்பதை புத்திசாலியான அன்னா ஹஸாரே உணர்வார். புரிந்து கொள்வார். அதன்படி அவர் நடப்பார் என்று நம்புகிறேன்.
சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய அமைப்பாக லோக்பால் செயல்பட வேண்டும் என்று ஹஸாரே உள்ளிட்டோர் விரும்புகின்றனர். அது நடக்க வாய்ப்பில்லை என்றார் சிபல்.

No comments:
Post a Comment