கடந்த வாரத்தில் ரஜினி தன் ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. இதை ரஜினியே தன் கைப்பட எழுதியிருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்களும் மற்றவர்களும். ஆனால் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரஜினி எழுத சொன்னதுதானே தவிர அவரே எழுதியதல்ல என்கிறார்கள் திரையுலகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சில முக்கியஸ்தர்கள். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லும் தகவலை கேட்டால் அதிர்ந்தே போவீர்கள்.
ரஜினி நினைத்திருந்தாலும் இந்த கடிதத்தை அவரே கைப்பட எழுதியிருக்க முடியாதாம். ஏனென்றால் அவரால் நன்றாக தமிழ் பேச முடியும். நன்றாக தமிழை படிக்க முடியும். ஆனால் எழுத மட்டும் முடியாதாம். அந்த பயிற்சியை அவர் மேற்கொள்ளவே இல்லை என்கிறார்கள் அந்த தகவல் பிரமுகர்கள்.
படப்பிடிப்பில் கூட தனக்கான வசனத்தை உதவி இயக்குனர்களை விட்டு சொல்ல சொல்லி கிரகித்து கொள்வாராம் ரஜினி. அப்படியே எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி வைத்துக் கொண்டுதான் பயிற்சி செய்வாராம்.
ரஜினி தமிழனையும், தமிழகத்தையும் நேசிக்கிற மனிதர். அப்படியிருக்கும் போது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல என்பதுதான் பலரது கருத்தும்! அதுமட்டுமல்ல, தமிழை சரிவர படிக்க கூட தெரியாத பல ஹீரோக்கள் 'உயிர் மண்ணுக்கு, உடல் தமிழுக்கு' என்று பிழைப்புக்காக முழங்கி வருவதையும் நாம் அறிவோம்! இவர்களுக்கு ரஜினி எவ்வளவோ மேல்...
சர்ச்சைக்குரிய கடிதம்
No comments:
Post a Comment