நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார் ஹன்சிகா மோத்வானி. தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹன்சிகா இப்போது விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் படத்திலும், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தந்திரீகா என்ற தெலுங்கு படத்திற்காக சுவிட்சர்லாந்து செல்ல இருந்த ஹன்சிகாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாது, தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சுவிஸ் புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, தந்திரீகா படத்திற்காக வெளிநாடு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கிளம்புகின்ற சமயத்தில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு விட்டது. சூட்டிங்கிற்கு நான் போகாமல் விட்டால் தயாரிப்பாளர் நஷ்டப்படுவார் என்பதை உணர்ந்து, காய்ச்சலையும் பொருட்படுத்தாது சுவிஸ் புறப்பட்டு சென்றேன். மேலும் எனது தாய் ஒரு டாக்டர் என்பதால், அவருடைய ஆலோசனையின் படி சில மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டு சூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment