சென்னையில் நடிகர் விவேக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு.
உலகம் வெப்பமாதலை தடுக்க நாடு முழுவதும் 100 கோடி மரக்கன்றுகளையாவது நட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரை நான் சந்தித்தபோது, திரைப் படங்களில் இந்த கருத்தை வலியுறுத்தும்படி கூறினார்.
தமிழகம் எங்கும் உள்ள எனது நற்பணி மன்றங்கள் மூலம் டிசம்பர் மாதத்துக்குள் 25 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.
இந்த பணியை எக்ஸ்னோரா கிளை இயக்கங்கள், எக்ஸ்னோரா இளைஞர் பாசறையுடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறோம். இதற்கான துவக்க விழா வரும் 26ம் தேதி காலை திருச்சி சிங்கார தோப்பில் நடைபெறும். மரக்கன்றுகளை மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி, கிராமங்களுக்கு வழங்க இருக்கிறோம்.
மரக்கன்று பெற்றவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க உள்ளோம். புளியங்கன்று, காளானை தவிர அனைத்து வகையான மரக்கன்றுகளையும் வழங்க இருக்கிறோம்.
இந்த கன்றுகளை வனத்துறையினர், தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனம் போன்றவற்றிடம் இருந்து பெற இருக்கிறோம். மரக்கன்று நடுதல் மூலம் மூலம் உலகம் வெப்பமாதலை ஓரளவு தடுக்க முடியும்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment