நடிகரும் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர், ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இயக்குனர் சீமான் இங்கிருந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வரும் இயக்குநர் சீமான், இலங்கை சென்று அதிபர் ராஜபட்சேவுக்கு எதிராக பிரசாரம் செய்வதோடு, அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.
காங்கிரசை யாரும் அழிக்க முடியாது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் வீழ்ச்சி ஏற்பட்டது.
பெரும்பாலான வாக்காளர்கள் மாற்றத்தையே விரும்பினர். இதனால்தான் ஜெயலலிதாவை முதல் அமைச்சராக்கி உள்ளார்கள். சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு, கடந்த 2001 06ம் ஆண்டு போல ஆட்சி செய்யும் என்றார்.
No comments:
Post a Comment