மேலே பாய்ந்த வேங்கையை மெல்ல மெல்ல பூனையாக்கிவிட்டார் ஹரி. பாலா என்ற புதிய டைரக்டருக்கும் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த டைரக்டர் ஹரிக்கும் வேங்கை டைட்டில் விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. ஒரே டைட்டிலுக்கு இருவரும் உரிமை கொண்டாடினார்கள். வருகிற 7ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள் ஹரியும் இப்படத்தை தயாரித்த விஜயா புரடக்ஷனும். 8ந் தேதிதான் வெள்ளிக்கிழமை. படங்களை வெளியிடுவது இந்த கிழமையில்தான் நடக்கும். ஆனால் ஒருநாள் முன்னதாகவே இவர்கள் வருவதற்கு காரணம், மேற்படி தேதியில் அஷ்டமி வருவதால்தானாம்.
ஆனால் அதற்கு முன்பே வேறொரு அஷ்டமி கோர்ட் வாசலில் நின்றது. வேங்கை தலைப்பை ஹரி பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தீர விசாரித்த நீதிமன்றம் வேங்கை தலைப்பை ஹரி இயக்கும் படத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து ரிலீஸ் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார்களாம். மதுரை, டி.கே இரு ஏரியாக்களையும் ஏற்கனவே விற்பனை செய்துவிட்ட காரணத்தால், மற்ற ஏரியாவை மட்டும் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் ஒரு திமுக விவிஐபி. இவர் ஒரு மத்திய அமைச்சரும் கூட!
அதிருக்கட்டும்... இந்த படம் வந்தால் தனது சம்பளத்தை ஏழு கோடிக்கு உயர்த்தும் முடிவிலிருக்கிறாராம் தனுஷ்.
No comments:
Post a Comment