மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை யாரோ திருடிவிட்டனர். அதே கம்ப்யூட்டிரின் மானிட்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள அறை எண் 203ல் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸக் மாயமாகியுள்ளது என்பது கடந்த 3ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே கம்ப்யூட்டரின் மானிட்டர் காணாமல் போனது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்.
கடந்த 3ம் தேதி மேலும் ஒரு மானிட்டர் மற்றும் ஹார்டு டிஸ்கும் காணாமல் போகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்தி துறையில் பணிபுரியும் ஈஸ்வர் மெஹ்தோ என்பவர் கடந்த 3ம் தேதி காலை வேலைக்கு வந்தது தனது கம்ப்யூட்டரை ஆன் செய்தும் அது வேலை செய்யவில்லை. அப்போது தான் ஹார்டு டிஸ்க் மாயமானது தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனைப்படி போலீசில் புகார் கொடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி தனது கம்ப்யூட்டர் மானிட்டரை காணவில்லை என்று இதே மெஹ்தோ தான் போலீசில் புகார் கொடுத்தார். கடந்த 3ம் தேதி அந்த அலுவலக்தில் மேலும் ஒரு மானிட்டரும், ஹார்டு டிஸ்கும் மாயமாகியுள்ளது. இது குறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தில் பணி்புரியும் யாரோ தான் ஹார்டு டிஸ்க், மானிட்டரை திருடியிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கருதுவதால் அங்கு பணிபுரிபவர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பிறகே வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
முன்பு அலுவலகத்திற்கு உள்ளே வரும்போது மட்டும் தான் எக்ஸ்ரே மெஷின் மூலம் ஊழியர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்படும். தற்போது வெளியே செல்கையிலும் பரிசோதிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
ஒரு ஹார்டு டிஸ்க்கையே பாதுபாப்பா வைத்திருக்க முடியல்ல நாட்டை எப்படி பாத்குகாக்க போறீங்க...!
அது இருக்கட்டும், இப்போ என்ன சொல்ல வறீங்க 'இந்த ஹார்டு டிஸ்க்ல தானே 2G spectrum ஊழல் சம்பந்தமான ஆவணங்கள் இருந்திச்சு'ன்னு தானே சொல்ல வறீங்க...
இப்படிதாங்க முக்கியமான ஆவணங்களை எல்லாம் கொஞ்ச நாளாவே காக்கா தூக்கிட்டு போகுது முதல்ல இந்த காக்கால்ல காக்கா அத இந்தியாவ விட்டு தொரத்தணும்...
2G க்கு கோவிந்தாவா? அது கிடைக்காதுங்க.வடிவேல் தொலைத்த கிணறு கிடைத்தால் இதுவும் கிடைக்கும்.
ReplyDelete