மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்துள்ள படம் 'மயக்கம் என்ன'. இந்த படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் ‘பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்’ என்ற வரியும் இடம் பெற்றுள்ளது. இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.
பெண்களை கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு இந்த பாடல் முற்றிலும் எதிரானது என்றும் தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு கீதாஞ்சலி செல்வராகவன் வியப்பு தெரிவித்துள்ளார். இந்த பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வரிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஜோவியலான மூடில் பாடுவது போல உள்ளதே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல் எழுதப்படவில்லை என்றும் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பாடலை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் வரிகள்
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..
அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..
அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி போதும் மச்சான்..
அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி.
இதை பற்றி என்ன சொல்வது ...சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கு. ஈழத்தில் தமிழ் பெண்கள் சொல்லமுடியாத அளவுக்கு, இதுவரை மனித சமுதாயமே பார்த்திடாத , நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான முறையில் சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட போது. அந்த பெண்களும் மனிதகுலத்தில் பிறந்த பெண்சமூகத்தின் அங்கத்தினர்கள் தான் என்று தெரியவில்லையா...? அப்போது பெண் இனம் உணர்வாளர்கள் எங்கேய் போனார்களாம்...போங்கடா... நீங்களும் உங்க விளம்பர புத்தியும் .....
செல்வராகவன் தூக்கத்தில் இருந்து தற்போது தான் விழித்து எழுந்துள்ளார்.பாடல் வந்த தொடக்கம் கவிஞர்கள் பலரும்,Jaffna edition,அவள் விகடன் போன்ற பலரது எதிர்ப்பை பெற்றது இவருக்கு தெரியாததா? படத்தில் வரும் ஒரு காட்சிக்காக எழுதப்பட்டு இருந்தாலும் கூட இது ஒரு கேவலமான கீழ்த்தரமான பாடலாக தமிழ் உணர்வாளர்கள் பெண்களில் பலர் பார்க்கவே செய்கிறார்கள்.ஆனாலும் தமிழன் அடிமையாக வாழ ஆசைப்படும் போது இவை எதுவும் கண்ணில் தெரியாது.உண்மையாக தமிழனுக்கு உணர்வு இருந்தால்,ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போதும்,மீனவர்கள் இன்னமும் தாக்கப்படும் போதும்,மலையாளிகளின் தாக்குதல்களின் போதும் கண்ணை மூடிக் கொண்டு பார்த்திருப்பானா?தமிழக மீனவர்களின் உரிமையை சமீபத்தில் சிங்களத்திடம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட போதும் இன்னமும் தமிழர்கள் கண்ணை திறக்கவில்லையே.என்ன கொடுமை இது?
ReplyDeleteசெல்வராகவன் தூக்கத்தில் இருந்து தற்போது தான் விழித்து எழுந்துள்ளார்.பாடல் வந்த தொடக்கம் கவிஞர்கள் பலரும்,Jaffna edition,அவள் விகடன் போன்ற பலரது எதிர்ப்பை பெற்றது இவருக்கு தெரியாததா? படத்தில் வரும் ஒரு காட்சிக்காக எழுதப்பட்டு இருந்தாலும் கூட இது ஒரு கேவலமான கீழ்த்தரமான பாடலாக தமிழ் உணர்வாளர்கள் பெண்களில் பலர் பார்க்கவே செய்கிறார்கள்.ஆனாலும் தமிழன் அடிமையாக வாழ ஆசைப்படும் போது இவை எதுவும் கண்ணில் தெரியாது.உண்மையாக தமிழனுக்கு உணர்வு இருந்தால்,ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போதும்,மீனவர்கள் இன்னமும் தாக்கப்படும் போதும்,மலையாளிகளின் தாக்குதல்களின் போதும் கண்ணை மூடிக் கொண்டு பார்த்திருப்பானா?தமிழக மீனவர்களின் உரிமையை சமீபத்தில் சிங்களத்திடம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட போதும் இன்னமும் தமிழர்கள் கண்ணை திறக்கவில்லையே.என்ன கொடுமை இது?
ReplyDelete