டெல்லியைச் சேர்ந்த சதீஷ் ஸ்வானி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் எரிசக்தி துறை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக, புதிதாக உருவாக்கப்பட்ட குற்றப் புலனாய்வு இயக்குனரகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள அவரது இரண்டு பங்களாக்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 20 பேர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவர் 5 வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தொழில் அதிபர் ஸ்வானி, தனது வெளிநாட்டு வங்கி கணக்குகளில் ரூ.73 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்தார். அந்த பணத்தை ஒப்படைப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment