கொலவெறி பாடலுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கிறது.
”ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு” என்று பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார்.
இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ்.
நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப் பட்டாலும், அவற்றை பற்றி கவலை படாமல் தனது தொழிலை பற்றிய தொலைநோக்குப் பார்வையிலேயே இருக்கிறார் தனுஷ்......
இசை ரசிகன் மீது அப்படி என்ன கொலைவெறியோ தனுஷிற்கு
தனுசிற்கு வந்த சோதனையா இல்லை தமிழுக்கு வந்த சோதனயா?கவிப்பேரரசு போன்றோர் மூட்டை கட்ட வேண்டியது தானா? ஏனென்றால் இன்று தமிழர்கள் தமிழை மறப்பதையே விரும்புகின்றனர். தமிழ்ப் பெண்களின் ஆபாச நடனங்கள் வெளினாட்டு மக்களிடம் இதுதானா உங்கள் கலாச்சாரம் என்று கேட்கும் அளவிற்கு சென்றிருக்கிறது.என்னை கேட்கவும் செய்தார்கள் நேற்றைய சென்னை ஆபாச நடன வீடியோவை பார்த்த சில ஐரோப்பியர்கள்.சந்தி சிரிக்கிறது.கண்ணீர் வடிகிறது.
ReplyDelete