மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா 4 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். நேற்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் உறவுகள், பல்வேறு பிரச்சினைகள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா சார்பில் ரூ.1,319 கோடி செலவில் 49 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் இலங்கை அரசுடன் 5 ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்க உள்ளார். அப்போது கிளிநொச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உபகரணங்களை வழங்குகிறார். பொன்னகர் என்ற கிராமத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 18 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சிவபாத கலையகம் பாடச்சாலையில் நடைபெறும் விழாவில் 2 கட்டிடங்களை திறந்து வைக்கிறார். அதில், திறக்கப்பட உள்ள பிரதான கட்டிடம் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டில் 'பாஜ்' எனப்படும் ஜப்பானிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டது.
இது ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுவிட்டது. அதேபோன்று திறக்கப்படவுள்ள மற்றொரு கட்டிடம் கடந்த 1991-ம் ஆண்டிலேயே கட்டப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 2 கட்டிடங்களும் போரின்போது மிகச்சிறிய அளவில் சேதம் அடைந்தது. இருந்தும் அங்கு வகுப்பறைகள் நடந்து வந்தன. இந்த நிலையில், தற்போது அந்த கட்டிடங்களின் கூரை வேலையை சீர் செய்து அதற்கு வர்ணம் தடவி இந்திய அரசு புனரமைத்துள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஏமாற்று வேலை நடத்தி மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவை வைத்து இந்த கட்டிடங்களை இலங்கை அரசு திறந்து வைக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை இலங்கையில் இருந்து வெளியாகும் ஒரு தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாடுகளை பற்றி தங்களுக்குள் ஒரு மதிப்பும் மரியாதையும், மற்ற நாடுகளை பற்றி ஒரு எண்ணமும் வைத்த்திருக்கும் அதன் அடிப்படையில் தான் அந்த நாட்டையும் அந்த நாட்டு தலைவர்களிடமும் நடக்கும் நடந்து கொள்ளும். அந்த விதத்தில் பார்க்கும் போது இந்தியா மீதும் இந்திய தலைவர்கள் மீதும் இலங்கை என்ன நிலையில் இருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
ஒரு சின்ன கத்துக்குட்டி நாடு ஒரு பெரிய்யா..... நாட்டு தலைவர்களை இப்படி நடத்துகிறது என்றால் உலகநாடுகளிடம் இந்தியாவின் நிலை என்ன என்பது தெளிவாகிறது. இதை விட இந்தியாவுக்கு ஒரு அவமானம் இருக்கிறதா, இதற்க்கு பாகிஸ்தான் மேல்...
No comments:
Post a Comment